கொரானா பிரச்சனை முடிந்தவுடன் உக்ரைனை கேடயமாக வைத்து அமெரிக்காவும் ரஷியாவும் கோதாவில் இறங்க.. ஐரோப்பிய யூனியன்கள் அமெரிக்கா பக்கம் நிற்க, இதில் சீனா மற்றும் வட கொரியா நிலைப்பாடு உன்னிப்பாகப் பார்க்க படுகிறது.

அமெரிக்கா இந்தப் படையெடுப்பு ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என்று சொன்னாலும், யுத்தம் தொடங்கிய பின் எந்த தேசம் எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என சொல்ல முடியாது..

முக்கியமாக சீனா தனது ஆதரவினை ரஷ்யாவிற்கு வழங்கும் என்றால், போர் காலம் அதிகரித்து அது மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும்.. ஆனால் ஒன்று போர் மூண்டால் மிகவும் பாதிக்கப்படும் போகும் நாடு இந்தியாவும் ஒன்று தான்..

இந்தியா-ஆசியா-ஸ்ரீலங்கா கூட்டமைப்பு முன்னாள் பொருளாளர் என்ற முறையில் பல தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளேன். அந்த அடிப்படையில் இதனை சொல்வதில் தயக்கம் ஏதுமில்லை..

பாஜக ஒன்றிய அரசின் நிலையற்ற வெளியுறவுக் கொள்கை தான் காரணமா என்றால் அதை நடுநிலையுடன் பிரச்சனையை அணுகுவோர் மறுத்திட முடியாது..

அமெரிக்க உள்நாட்டு தேர்தலில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து டிரம்ப் காலை தேவையில்லாமல் பிடித்துக்கொண்டு பிரதமர் மோடி சுற்றி இருக்கக் கூடாது என பல வெளியுறவு துறை அதிகாரிகள் கருதுவதையும் புறம் தள்ளிவிட முடியாது..

காரணம் இதனை மனதில் வைத்து தான் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பதவியேற்ற பின்னர் இந்திய அமெரிக்க உறவு சீராக செல்லவில்லை..

இதனால் வேறு வழியில்லாமல் இந்தியா ரஷ்யாவுடன் பல உடன்படிக்கைகள் ஆயுதங்கள் வாங்குவதில் ஈடுபட, அமெரிக்காவும் இதை விரும்பவில்லை. எனவே அமெரிக்காவும் இந்தியா உறவை நம்பவில்லை ரஷ்யாவும் சந்தேகக் கண்ணோடுதான் இந்தியாவை அணுகுவதாக கருத வேண்டியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பிரதமர் நேரு முதல் மன்மோகன் சிங் வரை அமெரிக்க உறவை ஒரு தொலை தூரத்தில் தான் வைத்திருந்தார்கள்.. அயல்நாடுகளில் ராஜாங்க உறவு என்பது உணர்ச்சிகளுக்கு அடி பணியாமல் தனித்து இருக்க வேண்டும் என்பதுதான் விதி.

ஆனால் பிரதமர் மோடியோ ஒன் to ஒன் உறவை வெளிநாட்டுத் தலைவர்களுடன் ஏற்படுத்திக் கொள்ள முனைந்தார்.. அதுதான் அமெரிக்கா, இந்தியா உறவில் தற்போது பின்னடைவாகி உள்ளதாக அயலுறவு துறையில் பலரும் கருதுகிறார்கள்.

இந்த அணுகுமுறையால் தான் ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கிய ஆசிய வர்த்தக உடன்பாடு, இந்தியா சேர இயலாமல் வெளியே நின்று வேடிக்கை பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதன் பாதிப்பு நிச்சயம் இந்தியாவில் உற்பத்தி தொழில் மற்றும் கணினி சேவை துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு என்பதை அதனை சுய அறிவுடன் பேசும் எவரும் மறுதலித்திட முடியாது.

மொத்தத்தில் போர் பொருளாதாரத்தை மட்டுமல்ல. மனித இனத்திற்கு கேடு.. இந்த இடத்தில் தான் வன்முறையற்ற அகிம்சை முறையை போதித்த அண்ணல் காந்தி ரசிக்கப்படும் தலைவராக உலகமெங்கும் மிளிர்கிறார்.

இந்த இடத்தில் தான் இந்திய விடுதலைக்காக 14 வருடம் சிறையில் வாடிய non-aligned policy இந்திய அயலுறவுத் துறைக்கு வகுத்த பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அமைதி விரும்பும் அனைவராலும் கவனிக்கப்படுகிறார்.

இதனால் மூன்றாவது உலகப்போர் வந்தாலும் அல்லது உக்ரைன் படையெடுப்பு மட்டுமே நடைபெற்று அதன் பின் போர் நின்றாலும்.. ஆக இப்படியாக எந்த விதமான போரிலும் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் இந்தியாவுக்கு பெரும் இழப்புதான் ..

காரணம் உக்ரைன் படையெடுப்புக்குப் பின் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் நேச படைகள் கொண்டுவரும் பொருளாதாரத் தடை இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும்.. என்ன செய்வது வருத்தமுடன் தான் இதை சொல்ல வேண்டியுள்ளது நமக்கு தற்போது வாய்த்த ஒன்றிய அரசுக்கு மதியூகம் அவ்வளவுதான்..

இதனால் போரே வராமல் உக்ரேனும் ரஷ்யாவும் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுவதை தவிர இந்தியர்களாகிய நமக்கு வேறு வழியில்லை..

ஒருவேளை 2024 ஆம் ஆண்டில் பாஜக அரசு தூக்கி எறியப்படுமானால் அப்போது இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்..

17 வருடம் இந்தியாவை சிறப்பாக ஆண்ட நேரு நிர்மாணித்த non-aligned policy 500 கொள்கையை மீண்டும் தூசி தட்டி அதனை சீராகக் கொண்டு செல்ல வேண்டும்..

இதுதான் வருங்காலத்தில் எந்த நாடுகள் எந்த நாட்டுடன் போர் செய்தாலும் இந்தியா நடுநிலை மட்டுமல்ல சமரசம் செய்யவும் முன்னணி வகிக்கலாம்..

https://www.facebook.com/savenra/posts/8006792452679941