இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்களின் எண்ணிக்கை நடப்பு நிதி ஆண்டில் ரூ.29 கோடியை தொடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய செல்போன் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் இது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த நிதி ஆண்டில் மட்டும் உள்நாட்டில் ரூ.22.5 கோடி செல்போன்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இது நாட்டின் ஒட்டுமொத்த மொபைல் போன் தேவையில் 80% என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் மொபைல்போன் உற்பத்தி அதிகரிப்பால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ரூ.3 லட்சம் கோடி மதிப்புள்ள அந்நிய செலாவணியை இந்தியா சேமித்து இருப்பதாக அந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது.

மொபைல்போன் உற்பத்தியில் உலக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ள சீனாவிற்கு அடுத்த இடத்திற்கு இந்தியா தற்போது முன்னேறி இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.