மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விமானச் சேவை மீண்டும் துவங்குவதற்கு வசதியாக தயாராக இருக்கும்படி அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

விமானப் பயணத்தின்போது பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: ஜூன்.1 முதல் ஏசி பெட்டிகள் அல்லாத 200 ரயில்கள் இயக்கம்- அமைச்சர் பியூஷ் கோயல்

முன்னதாக கொரோனா பாதிப்பு காரணமாக, மே 31 ஆம் தேதி வரை விமான, ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்படாது என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.