பிரபல தனியார் ஆய்வகமான மெட் ஆல் நிறுவனத்தின் கொரோனா பரிசோதனை உரிமத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையம் உள்ளது. இதில் பிரபலமான தனியார் மையம் மெட் ஆல் ஆய்வகமும் ஒன்று. தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கொரோனா தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் முதல் 5 இடத்தில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய பிரபல தனியார் ஆய்வகமான மெட்ஆல் நிறுவனத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா இருப்பதாக தவறாக பதிவு செய்து உள்ளதாக மெட் ஆல் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.

கடந்த மே 19, மே 20 தேதிகளில் தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத 4,000 பேருக்கு தொற்று உறுதி என ஐசிஎம்ஆரில் தவறாக பதிவேற்றம் செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. அந்த புகாரில் கொல்கத்தாவில் கொரோனா பாசிடிவ் இருந்தவர்களை கள்ளக்குறிச்சியை சேர்ந்தவராக அறிவித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்து காட்டிய புகார் அடிப்படையில் மெட் ஆல் நிறுவனத்தின் கொரோனா பரிசோதனை உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த புகார் குறித்து அடுத்த 3 நாட்களுக்குள் விளக்கம் தருமாறும் மெட் ஆல் நிறுவனத்துக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் வாரிசுகளுக்கு அரசு பணி நியமன ஆணை- முதல்வர் முக ஸ்டாலின்