5 மாநில தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதிகளின் படி 3 மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, ’10 நாட்கள் கேட்டோம், 2 நாட்களில் முடித்துள்ளோம்’ என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.
 
அதனை நிறைவேற்றும் வகையில் மத்தியபிரதேசம் மாநில முதல்வராக பதவியேற்ற கமல்நாத் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகளின் வங்கிக்கடன்களை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
 

பின்னர், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகெல் 6100 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயிகளின் கடன்களை இன்னும் 10 நாட்களில் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
 
மேலும் நேற்று, ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான வங்கி கடன்களை ரத்து செய்து முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
 
இதனால் கடன்களை ரத்து செய்ய  கோரி போராடி வந்த அம்மாநில லட்சக்கணக்கான விவசாயிகள் மகிழ்ச்சியில் இருப்பதாக எஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன