அஸ்ஸாமில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை இல்லை. 15 வயதான மாடுகளை இறைச்சிக்காக வெட்டலாம்; முறையான அனுமதி இருந்தால் போதுமானது.
 
பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் பிஸ்வாத் செரியலி என்ற சிறிய நகரத்தில், கடந்த ஏப்ரல் 7- ந் தேதி நடந்த இந்தச் சம்பவம் இப்போது காணொளியாக இணையத்தில் பரவிவருகிறது.
 
சகுத் அலி என்ற 68 வயது முதியவரை மண்தரையில் முழங்காலிடவைத்து, சுற்றி இருந்தவர்கள் அவரை அடித்துத் துன்புறுத்தும் காட்சி பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது
 
அடித்ததோடு நில்லாமல் பின்னர், பன்றிக்கறியைக் அவரின் வாயிலே திணித்து அவரை சாப்பிடவைத்தனர்.
 
அதோடு, வெறி அடங்காமல் நீ இந்தியனா , பங்களாதேசியா அடையாள அட்டையைக் காட்டுமாறு கூறியும் தாக்கியுள்ளனர்.
 
போலீஸார் கூறுகையில், ”சகுத் அலி வாரச் சந்தையில் மாட்டுக்கறி விற்றுவந்துள்ளார். இதற்கான லைசென்சும் அவரிடத்தில் உள்ளது. 35 வருடங்களாக சகுத் அலி இங்கு மாட்டிறைச்சி வியாபாரம் செய்கிறார். அப்படியிருந்த நிலையிலும் முதியவரை அந்தக் பசுவின் பெயரிலே ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் செயலபடும் ஹிந்து தீவிரவாத கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது.
 
சகுத் அலியைத் தாக்கிய கும்பல், சந்தையின் மேலாளர் கமல் தபாவையும் மிரட்டியுள்ளனர் ” என்றும் தெரிவித்தனர்.
 
சகுத் அலியின் உறவினர், கமல் தபா ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாதவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
தற்போது, சகுத் அலி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.