தங்களிடம் 2003ஆம் ஆண்டில் இருந்து பிடித்து வைத்த CPS பணம் 22000 கோடி ரூபாய் என்னவாயிற்று என்றும் ., ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அவர்களது போராட்டம் ஒரு வாரமாக தொடந்த நிலையில் போலிஸ் அத்துமீறி ஆசிரியர்களை திருடனை பிடிப்பது போல சட்டையை பிடித்து தரதரவென இழுத்து செல்லும் காட்சி வெளியாகி பலரை அதிர்ச்சி அடையவைத்துள்ள நிலையில் தலைமைச் செயலக ஊழியர்கள் வரும் வெள்ளி முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக திங்களன்று அறிவிப்பு வெளியானது.
 
இதுதொடர்பாக தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவரான அந்தோணிசாமி திங்களன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
 
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தலைமைச் செயலக ஊழியர்களும் வெள்ளி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
 
அதற்கு முன்னோட்டமாக வரும் புதன்கிழமையன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களை அரசு உடனே அழைத்துப் பேசி, சுமுகத் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக அரசுலைமைச் செயலளார் கிரிஜா வைத்யநாதன் முலம் எச்சரிக்கை விடுத்து உள்ளது அதில் ” நாளை அடையாள வேலைநிறுத்தம் செய்து வேலைக்கு வராவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலக ஊழியர்களுக்கு கூறி உள்ளார்.