சமூகம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதி பெண் பலி

சேலம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில், சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள நாட்டுக்கோட்டை மேம்பாலம் அருகே கடந்த ஞாயிறன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்றுள்ளார். அவரின் கார் முன்னால் டிஐஜி விரைவுப் படை வாகனம் சென்று கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது வேன் மோதியது. இந்த விபத்தில் காரின் பின்னால் அமர்ந்திருந்த 2 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சவுந்தரம் அம்மாள் என்பவர் இன்று உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர் டைனோசர் முட்டைகள் சர்ச்சை.. வெளியான ஆய்வு முடிவு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.