.,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்த நிலையில் …
மேலும் நாகை மாவட்டத்தில் 151 கிராமங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், நாகை முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கூடுதலாக 2500 லிட்டர் பால், 2.5 டன் பால்பவுடர் தயாராக உள்ளதாகவும் தெரிவித்த நிலையில் ..
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி நாகக்குடையான், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
 
விழுந்தமாவடி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அமைச்சர் வந்த காரை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினரும் அமைச்சரின் பாதுகாவலரும் அவரை பத்திரமாக மீட்டு, சுவர் எறி அமைச்சரை குதிக்க வைத்து வேறு ஒரு காரின் மூலம் அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நாகை மாவட்ட டிஎஸ்பி விஜயகுமார், விழுந்தமாவடிப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு வழிவிடுமாறு கோரிக்கை விடுத்தார் . இரண்டு நாட்களாக முகாம்களில் உணவு தரமால் ஏமாற்றியதால் ஆத்திரத்தில் இருந்த மக்கள்  போராட்டக்காரர்கள் டிஎஸ்பி விஜயகுமார் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் .., போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
 
இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், கஜா புயல் தொடர்பாக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை வெளிப்படையாகப் பாராட்டி இருந்ததாகவும் ஆக்கப்பூர்வ முயற்சியை அரசியலுக்கு அப்பாற்பட்டே பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது
மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக இருப்பதை நேரில் பார்த்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நேரில் பார்வையிட்ட இடங்களில் எல்லாம் மக்களின் அபயக் குரலும் அவர்கள் வெளிப்படுத்திய அவநம்பிக்கையும் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் பரிதவிக்கும் மக்களை நேரில் சென்று பார்க்க முதலமைச்சருக்கு நேரமும் மனமும் இல்லை எனவும் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பேரிடர் காலத்தில் போர்க்கால அடிப்படையில் எந்தெந்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை எனவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை வரும் 20ம் தேதி, நேரில் பார்வையிட உள்ளதாக  முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார் ..