மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: 106
Geologist (Group A) : 50
Geophysicist (Group A) : 14
Chemist (Group A) : 15
Junior Hydrogeologists (Scientist B), Group A : 27

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதி: ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஹைட்ராலஜி மற்றும் துறை சார்ந்த முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2019 @ 6.00pm

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 28.06.2019

விண்ணப்பிக்கும் முறை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் வேலை வாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…