அரசியல் கர்நாடகா கேளிக்கை

மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் களமிறங்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்

அரசியலுக்குள் வரும் முக்கிய நடிகராக பிரகாஷ்ராஜ் இருக்கிறார். ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட போவதாக கூறினர். ஆனால் இதுவரை தேர்தலில் போட்டியிடுவதாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் 2019ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜவுக்கு எதிராகவும், தீவிர இந்துத்துவாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால், பாஜக.வினரால் கடுமையான விமா்சனத்திற்கும் உள்ளானாா்.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று தனது ரசிகா்களுக்கும், ஆதரவாளா்களுக்கும் வாழ்த்து தொிவித்த பிரகாஷ்ராஜ், புத்தாண்டு வாழ்த்துடன் சோ்த்து, நான் வருகின்ற மக்களவைத் தோ்தலில் போட்டியிட உள்ளதாக தனது ட்விட்டா் பக்கத்தில் தொிவித்திருந்தாா். மேலும் மக்களின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் தொிவித்திருந்தாா்.

இதை உறுதிசெய்யும் விதமாக, வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். எனது புதிய பயணத்தை அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

130 Replies to “மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் களமிறங்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *