அரசியல் உயர் நீதிமன்றம் பெண்கள்

பொள்ளாச்சி பாலியல் சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் தூக்கியடிப்பு

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்
 
பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மதுரை ஐகோர்ட்டு கூறிய நிலையில் , தமிழகம் முழுவதும் அதிமுக அரசை எதிர்த்து முக்கியமாக அதிமுக அரசின் முக்கிய புள்ளி பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய கோரி போராட்டங்களை மாணவர்கள் தொடர்ந்த நிலையில் .,
 
பாலியல் கொடுமையில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட கோவை எஸ்.பி பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.
 
மேலும் கோவை மாவட்ட புதிய எஸ்.பி ஆக சுஜித்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
புகார் கூறிய பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதால் தமிழக  அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்த நிலையில் நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராம் மற்றும் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் நடேசனும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய டிஎஸ்பியாக சிவக்குமார், ஆய்வாளராக வெங்கடராமன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதில் சிபிஐக்கு மாற்றம் செய்த தமிழக அரசும் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட அதிமுக அரசையும் கடுமையாக கண்டித்த நீதிமன்றம் அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது
 
 
ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.