தேமுதிக-வில் பிரேமலதா பதவிகள் எதுவும் வகித்து வராத நிலையில், சில தினங்களுக்கு முன்னர், முதன் முறையாக பொருளாளர் பதவி சமீபத்தில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்கட்சியின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் தேமுதிக தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். அப்போது தேமுதிகவின் வளர்ச்சி பணிகள், பிரபலமாக பேசப்பட்டு வரும் மீ டூ மற்றும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா விரிவாக பேசினார்.

அப்போது அவர் கூருகையில், மீ டூ குறித்து எல்லோரும் பேசுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் நெருப்பாக இருந்தால் மீடூ எப்படி வரும். ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும்? இந்த மீ டூ இயக்கத்தை பெண்கள் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அதை வைத்து சர்ச்சை செய்யக்கூடாது என்றார்.

மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார். இன்னும் 15 நாளில் அந்த வெளிநாடு பயணம் அமையவிருக்கிறது என்றார் .