அம்பரீஷ் பிரபல கன்னட நடிகர் ஆவார். அவர் கன்னட படங்களில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். அவர் சீத்தாராமையா தலமையிலான அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்திலான அமைச்சராக பதவி வகித்தவர்.
 
அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
 
அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்ததால், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
 
அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், இன்று இரவு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உயிர்பிரிந்தது.
 
அம்பரீஷின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நல்ல மனிதநேயமுள்ளவரும், என் நெருங்கிய நண்பரான அம்பரீஷை இன்று இழந்து விட்டேன். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.