விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை தரிசனம் செய்தார். அவர் சென்ற பின்னர் பாஜ பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தரிசனம் செய்தார்.

மேலும், அங்கிருந்த சடகோப ராமானுஜ ஜீயரை சந்தித்தார் பின்னர் நிருபர்களிடம் எஸ்.வி.சேகர் கூறுகையில், ‘‘ராஜபாளையத்தில் நடக்கும் பாஜ மாநில செயற்குழுவுக்கு எனக்கு அழைப்பு இல்லை. என்னைக் காட்டிலும் பிரபலமானவர்கள் இருப்பதாக நினைக்கிறார்கள். தமிழக பாஜ தலைமை என்னை பயன்படுத்தவில்லை. என்னைப் பயன்படுத்திக் கொண்டால், அவர்களுக்கு நல்லது என்று மிரட்டல் விடுத்தார்.

நிருபர்கள் எச்.ராஜா விவகாரம் குறித்து கேட்டதற்கு, ‘அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அதை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டியது எச்.ராஜாவின் கடமை’ என்றார். நடிகர் கருணாஸ் கைது குறித்த கேள்விக்கு, ‘எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக பார்க்கக் கூடாது’ என்றார்.

‘தமிழிசை சவுந்தரராஜன் தலைமையை ஏற்கிறீர்களா? இல்லையா’ என கேட்டதற்கு, ‘அவர் தலைமையை ஏற்பதை தெரிவிக்க, தினமும் அவர் வீட்டின் முன் போய் நிற்க முடியுமா’ என்று நக்கல் அடித்து விட்டு சத்தமாக சிரித்தார்

அதன் பின்னர் அவர் பேசியது தான் ஹைலட் ..இதை கேட்டதும் தமிழசை மற்றும் அவரின் ஆதரவளார்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ..அப்படி அவர் பேசிய முக்கிய விஷயம் இதோ :

வாய்ப்பு கிடைத்தால், தமிழக பாஜ தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்வேன். இப்போது பாஜகவுக்கு இருக்கும் ஓட்டு சதவீதத்தை விட, என்னால் அதிகமாக ஓட்டு வாங்கி காட்ட முடியும்.

பிரபல எஸ் வி சேகர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கணவரின் தம்பி என்பதாலும்., அவர் பிரதமர் மோடிக்கு மிகவும் வேண்டியவர் என்பதாலும்., மேலும் அவர் என்ன பேசினாலும் அவரை யாராலும் கைது செய்ய முடியாது என்பதாலும் என்ன செய்வது என்ற குழப்பதில் தமிழிசை அழ்ந்து உள்ளதாக அவரின் நெருங்கிய பேர் சொல்ல விரும்பாத ஆதரவளார் ஒருவர் தெரிவித்தார்