தொடர்ந்து தோல்வியை சட்டமன்ற தேர்தலில் சந்தித்து வரும் பாஜக  வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றால் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.
 
தில்லியில் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தைத் துவக்கி வைத்த போதுதான் அமித் ஷா இவ்வாறு பேசினார்.
 
அதாவது அவர் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தல் 3வது பானிபட் போருக்கு சமம். இந்த தேர்தலில் பாஜக தோற்றால், நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும்.
 
1761ல் மராத்தாக்கல், முகலாலயப்படையிடம் தோற்றதால்தான் இந்திய நாடே 200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்க வேண்டியதாயிற்று. எனவே, வரும் மக்களவைத் தேர்தல் நாட்டுக்கு மிகவும் முக்கியம்.
 
மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். பிரதமர் மோடியை யாராலும் வீழ்த்த முடியாது. அவர் ஒரு போர்வீரன். எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அவரை வீழ்த்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், 2014ம் ஆண்டு தேர்தலின் போது வென்ற இடங்களை விட கூடுதல் இடங்களை பாஜக வெல்லும் என்றும் அமித் ஷா கூறினார்.
ஆனால் “2019ல் முதலில் 100 எம்.பி  சீட்வாது  ஜெயிக்க  வழி பாருங்க” என அவரின் பேச்சை   சமூக வலைதளத்தில் பலரும் கிண்டல் அடித்து வருவது பாஜகவினரை கலங்கமடைய செய்துள்ளது.