சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே, வேட்பாளர் அன்புமணி ராமதாஸிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டர் வாயில், சரமாரியாக செம்மலை குத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தத் தொண்டர் திமுகவில் இணைந்தார்.
 
இதை தொடர்ந்து அதிமுக வேட்பாளரிடம் பொதுக்கூட்ட மேடையில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கோபமாக பேசியது, அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி கைப்பற்ற தூண்டும் விதத்தில், அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக பேசியதாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக எம்எல்ஏ ஏழுமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது, வேட்பாளர் ஏழுமலை மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். இதனால் கோபமடைந்த அன்புமணி, பேசத் தொடங்கியதும், வேட்பாளர் எங்கப்பா என கேட்டார்.
 
 
மக்கள் வெயிலில் நிற்கிறார்கள். வேட்பாளர் உட்கார்ந்திருக்கிறார் என்று கூறிய அன்புமணி, பத்து நாட்களுக்கு சேரில் உட்கார கூடாது என்றும், நின்று கொண்டிருக்க வேண்டும் என கோபத்துடன் பேசினார்.
 
அவரது இந்த பேச்சு அதிமுகவிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரபரப்பட்டு வருகிறது.
 
இதேபோல், தேமுதிகவின் பொருளாளர் விஜயகாந்த் பேசுவதும், சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.