மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதா வழங்க கோரிய அரசாணை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க 3 முதல் 4 வாரங்கள் ஆய்வு செய்ய கால அவகாசம் தேவைப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாஜக கல்விப் பிரிவு மாநில செயலரான நந்தகுமார் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம். மசோதா ஏற்கப்பட்டால் நீதிமன்றத்தில் தடையாணை பெறுவோம் என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, பாஜக செயலரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்துள்ளார். மேலும் அவர் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் முருகன் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சியின் மாநில செயலருக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்னும் முருகனின் அறிக்கையால், கட்சியின் மாநில செயலராக நியமிக்கப்பட்டவர் எவ்வாறு கட்சிக்கு எதிராக கோரிக்கை விடுப்பார் என்றும் அப்படி தொடர்பு இல்லை எனில் பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் ஏன் இன்னும் கட்சியில் உள்ளார் என்றும் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பெரம்பலூர் டைனோசர் முட்டைகள் சர்ச்சை.. வெளியான ஆய்வு முடிவு