உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய பாஜக ஒன்றிய அமைச்சர் ஆசிஸ் மிஸ்ரா மகன் எதிரொலியாக நடந்த எட்டு கொலைகள் நடத்தப்பட்ட இடத்தில்..

அப்படி பாஜகவினரால் சுட்டும் கார் ஏற்றியும் கொலை செய்யப்பட்ட 4 விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற பிரியங்கா காந்தி இன்று அதிகாலை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனரே..

அதுமட்டுமா சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதாவும் வீட்டுக்காவலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்காவலை எதிர்த்து வீதியில் போராட்டத்தில் சற்றுமுன் அவர் இறங்க..

சமாஜ்வாடி கட்சியின் தொண்டர்கள் திரளாக அங்கு திரண்டு கொண்டிருக்கின்றனர். போலீஸுக்கும் தொண்டர்களுக்கும் நடந்த மோதலில் போலீஸ் வாகனம் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே 10 சதவீத உயர்சாதி மக்களுக்கு வழங்கப்பட்ட #EWS இட ஒதுக்கீடு காரணமாக, தேர்வுகளில் உயர்ஜாதி வகுப்பினரை காட்டிலும் அதிகமாக மதிப்பெண்கள் எடுத்தும் தங்களின் வாய்ப்பு உரிமை இந்திய குடியுரிமை பணிகளிலும் வங்கிகளிலும் பறிபோகிறது என்றே வருத்தத்துடன் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜாதிவாரியான கோரிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத நிலை..

இத்தனைக்கும் #பாஜக தனது 2019 தேர்தல் அறிக்கையில் ஜாதி வாரியாக மக்கள் கணக்கெடுப்பு நடக்கும் என்று சொல்லியும் வழக்கம்போல் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் அல்வா கிண்டி கொடுக்க..

வேறு வழியில்லாத நிலையில் #யாதவர்கள் அதிகமாக கொண்ட உத்தரப்பிரதேசத்தில், பிற்படுத்தப்பட்ட ஜாதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அகிலேஷ் யாதவ் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி அதன்மூலம் யாதவர்களுக்கும் மற்ற பிற்படுத்தப்பட்ட மக்களின் பறிபோகும் உரிமையை மீட்டுத் தரப்படும் என அறிவிக்க..

இந்த முறை உத்தர பிரதேச தேர்தலில் ராமரை, அந்த இடத்தில் கட்டப்படும் கோயிலை சொல்லி நடத்தப்படும் ஆன்மீக ஆட்டமும் கை கொடுக்காது என்ற நிலை ஆர்எஸ்எஸ் எஸ்க்கு தெளிவாகிவிட..

டெல்லி பார்டரை தொடர்ந்து உத்திரபிரதேச அரசியல் ஆட்சியில் இப்போது பரவிக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரம் அடைவதைக் தடுக்க வன்முறையை பாஜக அரசு கையில் எடுக்க..

ஹரியானா #பாஜக முதல்வர் இன்னும் ஒரு படி மேலே போய் தொகுதிக்கு ஆயிரம் பேர் திரண்டு லத்திகளை எடுத்துக் கொண்டு விவசாயிகள் அடியுங்கள்..

மிஞ்சி மிஞ்சி போனால் சிறை இரண்டு மாதம் தான் ..பின்னர் நீங்கள் பாஜகவின் முக்கிய தலைவர் ஆகி விடுவீர்கள் என்று கேடுகெட்ட உயர்சாதி அயோக்கிய சாணக்கியன் போதித்த வன்முறையை பின்பற்றி கொளுத்திப் போட..

ஒன்றிய பாஜக அரசின் மந்திரியின் மகன் மிஸ்ரா துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு களத்தில் குதித்து விவசாயகளை சுட்டதால்.. மேலும் பாஜகவின் மந்திரி மகன் தனது காரை எடுத்து விவசாயிகள் மீது ஏற்றியதால்..

நான்கு விவசாயிகள் மரணிக்க, வெகுண்ட மக்கள் அவருடன் வந்த 4 பேர் தாக்கி காரை எரித்துவிட.. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட..

உத்தரபிரதேச ஹிந்தி பேசும் மக்கள் பூமி மீண்டும் பதட்டம் ஆனது.. மீண்டும் மீண்டும் கலவர பூமி ஆனது.. இந்தமுறை பாஜக வின் எடுப்பார் கைப்பிள்ளை ராமர் இல்லை காரணம்..

ஆனால் விவசாயிகளின் வயிற்றுப் பிரச்சனை தான் காரணம்…

இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பார்க்க சென்ற பிரியங்கா காந்தி கைது நிகழ்ந்திருப்பது மற்றும் அகிலேஷ் யாதவின் வீட்டுக்காவல் துரதிஷ்டவசமானது..

வயிறுப் பசித்தவன் விடமாட்டான்.. அதிகார ஜாதி வெறி பிடித்தவன் தன் அதிகாரத்தையும் விடமாட்டான்..

இவற்றையெல்லாம் கணக்கில் வைத்து பார்க்கும் போது மீண்டும் சமாஜ்வாடி கட்சியின் யாதவர்கள் சூழல் ஆட்சி உத்தரபிரதேசத்தில் ஏற்பட வாய்ப்பு அதிகமாக தெரிவதால்..

இந்த நிலை கூர்மைப் படுத்தப்பட.. அல்லது இப்படிப்பட்ட நிலையை கணக்கில் வைத்துக்கொண்டு #காங்கிரஸ் அனைத்து கட்சிகளுடன் இணைந்து தேர்தல் கூட்டணியை அமைத்திட முற்படும்போது..

பிற்படுத்தப்பட்டவர்கள் ஓரணியில் நிற்க பாஜக எடுக்கும் ஹிந்து என்ற பிற்போக்குவாத கோஷம் இனிமேல் உத்திரபிரதேச அரசியலில் ஈடுபட வாய்ப்பே இல்லை..

ஹிந்து ஹிந்து என்ற போர்வையில் இந்துக்களைத் நன்றாக வைத்து செய்வதைத் தவிர.. பாஜக எதுவும் செய்யவில்லை என்பதை கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் விலைவாசி உயர்வால் கடும் பாதிப்புக்கு உள்ளான இந்து மக்களும் நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளனர்..

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய.. அதுபோல இனி உத்திரப் பிரதேசத்தில் இனிமேல் பாஜகவை காப்பாற்ற முடியாது. “Untill some miracle happens bjp victory in uttarpradesh here in after not at all possible..”

ஆனால் உத்திர பிரதேச தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் அதிசயங்கள் நிகழவில்லை.. மாறாக இதுவரை இந்தியாவில் காணாத அக்கிரம அநியாயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன..

பாஜக முதல்வர்கள் லத்தியை எடுத்து ஒடுக்கப்பட்ட விவசாயிகளை அடிக்க சொல்கிறார்கள் .. பாஜக ஒன்றிய அமைச்சரின் மந்திரி மகன்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தெருவிலே விவசாயிகளை நோக்கி சுட ஓடுகிறார்கள்..

நியாயம் கேட்க போன பிரியங்கா காந்தி கைது செய்யப்படுகிறார்.. விவசாயிகளை பார்க்கக் கிளம்பிய முக்கிய எதிர்க் கட்சித் தலைவர் வெளிவர முடியாதபடி வீட்டுக்காவலில் வைத்து கைது செய்யப்படுகிறார். அதிகாரம் ஒரு சாதி சூழ்கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்னணியில் வெறி பிடித்த நாயாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களும் முக்கியமாக தங்களுக்கு வரவேண்டிய வங்கி வேலைகளும் அரசு வேலைகளும் தங்களைவிட மதிப்பெண்கள் குறைவாக எடுக்கும் உயர்ஜாதி வகுப்பினர் 10% EWS ஒதுக்கீட்டின் மூலம் தட்டிக் கொண்டு செல்வதை, இந்தியாவில் இருக்கும் 80 கோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இதை உன்னிப்பாக உற்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்..

விவசாயிகளின் வாழ்வாதாரம் போராட்டம் பஞ்சாப் ஹரியானாவில் தாண்டி இப்போது உத்தரப்பிரதேசத்தில் மையம் கொண்டு வருகிறது..

சாதி ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாக புரட்சி உற்பத்தி செய்யப்பட வேண்டிய கரணிகள் அத்தனையும் பாஜக அரசும் அதனை நடத்தும் உயர்ஜாதி மக்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில்..

செல்வ செழிப்பில் கொழித்த ஆச்சார்யாகளுக்கு அல்லவே. .

மாறாக 14 ஆண்டு வனவாசம் சென்ற யதுகுல குந்தி மகன்களுக்கு தான்.. துகிலுரியப்பட்ட பாஞ்சாலிக்கு தான்..

ஆக என்றுமே பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பில் மட்டுமே காலம் பதில் சொல்லியது தானே அறத்தின் வெற்றியாக இதுவரை இருந்தும் வருகிறது.

https://www.facebook.com/savenra/posts/7123478014344727