கொரோனா வைரஸ் பரவலால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நிதியுதவி செய்தால் வீடீயோ அனுப்படும் என்ற புதிய முயற்சியை தொடங்கியுள்ளார் பாடகி சின்மயி.

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 900க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இந்தியாவில் இரண்டாவது பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. இதனால் ஏப்ரல்-14 வரை போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா காரணமாக எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. அதனால் சினிமாவை நம்பி இருந்த தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என சினிமா நட்சத்திரங்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் நன்கொடை அளித்தனர்.

இதில் அதிகபட்சமாக நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி, அஜித் ரூ.1.25 கோடி, ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நயன்தாரா ரூ.20 லட்சம், தனுஷ் ரூ.15 லட்சம், சூர்யா, கார்த்தி, சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.10 லட்சம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் மற்றும் யோகி பாபு உட்பட பலரும் அரிசி, மளிகை பொருட்கள் கொடுத்தும் உதவிவருகின்றனர்.

ஆனால் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பிறமொழி நடிகர்கள், நடிகைகள் கோடிக்கணக்கில் உதவிகள் செய்துவரும் நிலையில், தமிழ் சினிமாவில் மட்டும் லட்சங்களில் உதவிகள் செய்கிறார்கள் என்ற பேசும் சமூகவலைதளங்களில் எழுந்துள்ளது.

இந்நிலையில் வேலை இல்லாததால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களில் பட்டியலை தயார்செய்து, அவர்களுக்கு பணம் அனுப்பிட்டுவிட்டு அதன் ஸ்கிரீன்ஷாட் அனுப்பினால் தனது குரலில் பிறந்தநாள் வாழ்த்து மெசேஜ் அல்லது பாடல் பாடி வீடியோ வடிவில் அனுப்பப்படும் என்ற புது முயற்சியை மேற்கொண்டுள்ளார் பாடகி சின்மயி.

நேற்று சின்மயி இந்த அறிவிப்பை வெளியிட்டதும் பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அவர்களுக்குளை ஊக்குவிக்க வாழ்த்து செய்தியை தொடர்ந்து அனுப்பி வருவதாக கூறியுள்ளார் சின்மயி.