நெல்லையில் விபத்தில் இறந்தவரின் மூன்று குழந்தைகளை தத்தெடுத்த காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆடிவேலுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் மலையடிக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோட்டூர்சாமி. இவர் அண்மையில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது மூன்று குழந்தைகளை புளியாங்குடி காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தத்தெடுத்துள்ளார்.

மனிதாபிமானம் கொண்ட ஆடிவேலின் முடிவை சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், “விபத்தில் மரணமடைந்த திருநெல்வேலி மாவட்டம், மலையடிக்குறிச்சி கோட்டூர்சாமியின் மூன்று குழந்தைகளை தத்தெடுத்த மனித நேயர் புளியாங்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் அவர்களை பாராட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.