சமூகம்

நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது- தனியார் பேருந்து உரிமையாளர்கள்

தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இயங்காமல் இருந்த பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 1ந்தேதி முதல், மாவட்டங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு தமிழகம் முழுவதும் சுமாா் 5000 தனியார் பேருந்துகள் இயங்கி வந்ததாகவும், கடந்த ஜூன் மாதம் அளிக்கப் பட்ட தளர்வின்போது, 4000 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், மாவட்டத்துக்கு வெளியே பேருந்துகளை இயக்க அனுமதியில்லை என்றால், நாங்கள் பஸ்களை இயக்குவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும், இதுகுறித்து ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 31) தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் நாளை இயக்கப்படாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக, பேருந்துகளை மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது. மேலும், பேருந்தின் அனைத்து இருக்கைகளும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் வாசிக்க: 4 நாட்களில் துணை தலைவரான மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை.. அதிருப்தியில் சீனியர்கள்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.