அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையை ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி கைப்பற்ற, அதிகாரமிக்க செனட் சபையில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையை தக்கவைத்து கொண்டுள்ளது.

அமெரிக்கா நாடாளுமன்றத்திற்கான இடைக்கால தேர்தலில் அதிபர் பிரதிநிதிகள் சபையில் டொனால்டு ட்ரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.

ஆனால் செனட் சபையின்வெற்றியை தக்கவைத்து கொண்டுள்ளது. அமெரிக்காவில் பதவிக்காலம் முடிந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள்,  செனட் சபை உறுப்பினர்கள் மாநில கவர்னர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பிரதிநிதிகள் அவையில் 435 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களில் 414 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் 220 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.இது கீழவையில் பெரும்பான்மை பலத்தை எட்ட போதுமான எண்ணிக்கை ஆகும்.

 

 

மேலும் பின்னடைவை அடைந்துள்ள ட்ரம்பின் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் 194 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. ட்ரம்பின் குடியரசுக் கட்சி கீழவையை இழந்தாலும் செனட் சபையில் மெஜாரிட்டியை தக்க வைத்துள்ளது.

செனட் சபைக்கான தேர்தலில் மொத்தமுள்ள 100 இடங்களில் 96 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் 51 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் 43 இடங்களை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவில் அதிக தொகுதிகளில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பாக 78 பெண்களும், டிரம்ப்பின் குடியரசுக் கட்சி 12 சார்பாக பெண்களும் தேர்வாகி உள்ளனர்.

மினசோட்டா மற்றும் மிச்சிகனில் செனட் சபைக்கு முதல்முறையாக 2 இஸ்லாமிய பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Rashida Tlaib (மிச்சிகன்)மற்றும் Ilhan Omar(மினசோட்டா) ஆகிய இருவரும் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.

அரிசோனா மற்றும் டென்னிஸி தொகுதி கறுப்பின பெண்களை முதல்முறையாக சென்ட் சபைக்கு அனுப்பி உள்ளது. ஜார்ஜியாவை சேர்ந்த சதாசி அப்ராம்ஸ் கவர்னராகி உள்ளார். இவர்தான் அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் கவர்னர்.