அரசியல் குரல்கள் தமிழ்நாடு

நக்கீரன் கோபால் தேச துரோக வழக்கில் கைதுக்கு காரணமான கட்டுரை

ஆசிரியர் நக்கீரன் கோபால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலா தேவி தொடர்பாக வெளியிட்ட கட்டுரையின் காரணமாகத்தான் கைது செய்துள்ளோம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக்கட்டுரை விவரம் அப்படியே ஆச்சு மாராமல் ஸ்பெல்கோ இதோ தருகிறது ..இதில் எங்கு தேச துரோகம் வருகிறது என்பதை படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

நக்கிரனில் வந்த கட்டுரை ஆசிரியர் : தாமோதரன் பிரகாஷ், சி.என்.ராமகிருஷ்ணன்

ஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப் பட்ட நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை பாலியல் நெருக்கடியில் தள்ளியது பற்றிய திடுக்கிடும் உண்மைகள் ஒவ் வொன்றாக தற்பொழுது வெளியாகத் தொடங்கியுள்ளது. காவல்துறையில் நேர்மையாகப் பணியாற்றும் அதிகாரிகள், “சுவாதி கொலையில் சிக்கிய ராம்குமாரை சிறையிலேயே கதை முடித்ததுபோல, நிர்மலா தேவிக் கும் குறிவைக்கப்பட்டது’ என அதிர்ச்சித் தகவலை வெளியிடுகிறார்கள்.

நிர்மலாவை ஏன் கொலை செய்ய வேண்டும்? யார், அதன் பின்னணி என விரிவாகக் கேட்டோம்.””ஏற்கனவே நிர்மலாவைப் போலவே மிக பிரபலமான செக்ஸ் வழக்கில் சிக்கிய டாக்டர் பிரகாஷை ஜாமீனில் வெளியே வரவிடாமல் சிறைக்குள்ளேயே அவரது வழக்கை நடத்தி தண்டனையும் பெற்றுத் தந்தார்கள். அதுபோலவே நிர்மலா தேவி வழக்கையும் கொண்டு செல்கிறார்கள். அது முடியாவிட்டால் சிறைக்குள்ளே அவரை கொலை செய்யவும் திட்டமிட்டிருந்தார்கள். இது நிர்மலா தேவிக்கே தெரியும் என்பதால்தான், “என்னைக் கொல்ல சதி நடக்கிறது’ என நீதிமன்றத்தில் கதறியிருக்கிறார் நிர்மலா தேவி” என விரிவாகவே சொன்னார்கள்.

“இந்த வழக்கை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவருடன் முடிக்க, அரசு நினைக்கிறது. இதனை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண் டும்’ என சி.பி.எம். மாநிலக்குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இதன் பின்னணி குறித்து அவர்களிடம் கேட்டோம். “”தமிழக கவர்னர் மீது நேரடியாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட இந்த வழக்கின் புலனாய்வு நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகி யோரைத் தாண்டிச் செல்லவில்லை.

இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி கலைச்செல்வன் மிக முக்கிய பங்கு வகித்துள்ளார். மாணவிகளை தவறாக வழிநடத்தியதில் இவருக்கும் பங்கு இருக்கிறது. இவர்தான் நிர்மலாதேவியை கல்லூரி மட்டத்திலிருந்து பல்கலைக் கழக வட்டாரத்திற்கு கொண்டு வந்தவர். இவர் கடைசிவரை குற்றவாளியாக்கப்படவில்லை என முருகனின் மனைவி சுஜா, பத்திரிகை யாளர்களிடம் பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகிறார்.

அதுபோலவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சின்னையா, துணை வேந்தர் செல்லத்துரை, கவர்னரின் செயலாளர் ராஜகோபால் ஆகி யோரும் குற்றவாளிகள். இவர்கள் தப்பிக்க விடப்பட்டனர். எல்லா வற்றுக்கும் மேலாக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தைப்பற்றி காவல்துறையின் விசாரணை ஆவணங்களில் ஒரு வார்த்தை கூட இல்லை. எனவேதான் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோருகிறோம்” என தெளிவாக விளக்குகிறார்கள் தோழர்கள்.

ஏன் மூன்றுபேருடன் வழக்கு முடிந்தது என்பதற்கு சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யும், நேர்மைக்குப் புகழ் பெற்ற முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தியுமான ராஜேஸ்வரி யிடம், நிர்மலாதேவி பதிவு செய்த வாக்குமூலமே சாட்சியமாகிறது. “”நான் நிர்மலாதேவி. எனக்கு வாழ்க்கையில் உயரவேண்டுமென லட்சியம் இருந்தது. கணவனைப் பிரிந்து வாழ்ந்த என்னை வளர்த்து பெரிய ஆளாக்குகிறேன் என கருப்பசாமியும் முருகனும் என்னைப் பயன்படுத்திக்கொண்டார்கள். கல்லூரி நிர்வாகமும் அதன் செயலாளர்களாக இருந்தவர்களும் கல்லூரியின் தேவைக்காக என்னை பல இடங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் கலைச்செல்வனின் அறி முகத்திற்குப் பிறகுதான் நான் கல்லூரிப் பெண்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாள ரான சின்னையாவை, கலைச்செல் வன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் இருவருக்கும் நானும் மாணவிகளும் பயன்பட்டோம். துணைவேந்தர் செல்லத்துரை என்னையும் மாணவிகளையும் பயன்படுத்திக்கொண்டார். அதன்பிறகு “எனக்கு துணை வேந்தர் பதவி வாங்கித் தருகி றேன், அதற்கான எல்லா தகுதி யும் உனக்கு இருக்கிறது’ என கலைச்செல்வன் ஆசைகாட்டினார். அந்த ஆசையை நிறைவேற்ற கல்வித்துறை அமைச்சர் களாக இருந்தவர்களிடம் என்னை அனுப்பி அறிமுகப் படுத்தினார்கள். பிறகு கல்லூரி மாணவிகளை அறிமுகப் படுத்தச் சொன்னார்கள். அழகாக உள்ள மாணவி களைத் தேடி அனுப்பி வைப்பேன். அவர்களின் பொருளாதாரச் சூழலை வைத்து மடக்குவேன். உயர் கல்வி அமைச்சராக இருந்த பழனியப்பனுக்கு என்னை மிகவும் பிடிக்கும். எடப் பாடி ஆட்சி அமைந்ததும், கவர்னராக பன்வாரிலால் புரோகித் வந்தார். அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைக்கச் சொல்லி அவரது தனிப் பட்ட செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி rajagopal-IAS ராஜகோபாலை சந்திக்கச் சொன்னார்கள். ராஜகோபாலுக்கு என்னையும் பிடித்து, என்னுடன் வந்த கல்லூரி மாணவிகளையும் பிடித்துவிட்டது. நான் அடிக்கடி சென்னைக்கு கல்லூரி மாணவிகளோடு பயணமானேன். கவர்னரின் ராஜ்பவன் மாளிகையில் கவர்னரின் செயலாளர் ராஜ கோபாலை சந்தித்துப் பேசிவிட்டு வருவேன்.

ராஜகோபாலை சந்திக்க நான் கவர்னர் மாளிகைக்குச் சென்றபோது பன்வாரிலால் புரோகித் என்னைப் பார்த்தார். “யார் இந்தப் பெண், யார் இந்த மாணவிகள்’ என கேட்டார் கவர்னர். கல்லூரி மாணவிகளிடம் மிகவும் கேஷுவலாகப் பேசிய கவர்னர், என்னிடம் மிகவும் அன்பாகப் பேசினார். என்னைப்பற்றி ராஜகோபாலிடம் விசாரித்தார். “கவர்னர் நினைத்தால் என்னை துணைவேந்தராக நியமித்துவிட முடியும். அதற்கு நான் உதவி செய்கிறேன்’ என சொன்னார் ராஜகோபால்.

கவர்னர் மதுரைக்குப் பக்கத்தில் நிகழ்ச்சிக்கு வந்தால், கவர்னர் மாளிகையிலிருந்து எனக்கு அழைப்பு வரும். நானும் புதிய மாணவிகளுடன் ராஜகோபாலை சந்திப்பேன். இப்படி முருகன், கருப்பசாமி, கலைச்செல்வன், சின்னையா, செல்லத்துரை, ராஜ கோபால் வரை நான் நூற்றி முப்பது கல்லூரி மாணவிகளை அறிமுகம் செய்திருக்கிறேன். அதிலும் ராஜ கோபாலுக்கு புதிய மாணவிகளின் அறிமுகம் தேவைப்படும். அதனால் புதிய கல்லூரி மாணவிகளை வாட்ஸ்ஆப் மூலமாக படம் பிடித்து அவர்களுக்கு புகைப்படங்களை அனுப்புவேன். அவர்கள் அறிமுகம் செய்ய விரும்பும் பெண்களை எப்பாடுபட்டாவது சமாதானப்படுத்தி, அறிமுகம் செய்துவைப்பேன்.

துணைவேந்தருக்கான தேர்வு கமிட்டி மூலமாக என்னை தேர்வு செய்ய, கவர்னரை சந்திக்க ராஜகோபால் ஏற்பாடு செய்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை யில் கவர்னருடன் மிக நெருக்கமாகப் பேசினேன். அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. கல்லூரி மாணவிகள் உட்பட வேறு யாரையும் கவர்னர் பார்க்க விரும்பவில்லை. அதன்பிறகு கவர்னரை நான்கு முறை சந்தித்துப் பேசினேன். நான் கவர்னரை சந்திப்பது மதுரை மாவட்ட அமைச்சர்கள் உட்பட பலபேருக்குத் தெரியும். அவர்களில் யாரோ ஒருவர் கல்லூரி மாணவிகளைக் கேட்டு நான் போன் செய்வதை டேப் செய்து அம்பலப்படுத்திவிட்டார்கள்” என்கிறது நிர்மலாதேவியின் வாக்குமூலம்.
இந்த வாக்குமூலத்தை டேப் செய்த ராஜேஸ்வரி, அதை சி.பி.சி.ஐ.டி.க்கு புதிதாக வந்த தலைவரான அமரேஜ் பூஜாரிக்கு அனுப்பி வைத்தார். அவர் இந்த விவகாரத்தில் தொடர்பு டைய அனைவரையும் விசாரிக்க உத்தரவிட்டார். கவர்னர் மற்றும் அவரது செயலாளர் தவிர அனைவரையும் ராஜேஸ்வரி விசாரித்தார். நிர்மலாதேவியால் அறிமுகப்படுத்தப்பட்ட 130 பெண்களையும் விசாரித்தார் ராஜேஸ்வரி.

அதில் 63 பெண்கள், “நாங்கள் யார், யாரிடம் அறிமுகம் ஆனோம்’ என வெளிப்படையாகவே சொல்ல முன்வந்தார்கள்.”அனைத்து விவரங்களையு கவர்னரின் செயலாளர் ராஜகோபால் மற்றும் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டிக்கு அனுப்பினார் அமரேஷ் பூஜாரி. அவர்கள் முதல்வருக்கு அனுப்பினார்கள். கவர்னர் மாளிகை யும், முதல்வர் அலுவலகமும் “இந்த விவகாரம் முருகன், கருப்பசாமியைத் தாண்டிப் போனால் ஆபத்து. இந்த இருவருடன் நிர்மலாவை சேர்த்து முடித்துவிடுங்கள்’ என கட்டளை யிட்டது. ஆனால் ராஜேஸ்வரியும் அமரேஷ் பூஜாரியும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரிடமும் வலுவாக பேசியபின் “இந்த விவகாரத்தில் மூன்றுபேர்தான் குற்றவாளிகள்’ என குற்றப்பத்திரிகை தயார் செய்தார்கள்.

“நான் கவர்னருடன் பேசினேன்…. பழகினேன் என என்னை முதலில் கைது செய்த அருப்புக்கோட்டை போலீசில் தொடங்கி அனைவரிடமும் சொல்லிவிட்டேன்’ என்கிறார் நிர்மலா. நிர்மலாவின் வாயை மூட அவருக்கு ஜாமீன் கொடுக்காமல் சிறைப்பறவை யாக்கி, கவர்னரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது மத்திய-மாநில அரசுகள்” என்கிறார்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.

ஆதாரம் : நன்றி நக்கீரன்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

Leave a Reply