அரசியல் தமிழ்நாடு

திக்கற்ற திசையில் பரிதவிக்கும் “காடுவெட்டி குரு” குடும்பம்

குறிப்பிட்ட ஜாதியின் மாவீரன் என்று போற்றப்பட்ட காடுவெட்டி குரு குடும்பத்தின் தற்போதய நிலை என்ன ..

காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணியம்மாள்   ” குரு இறந்த பிறகு என்ன செஞ்சீங்க, என் பேரனை ஏன் இழுக்குறீங்க “ என்று பா.ம.க மாநிலத் துணைப் பொதுச் செயாலாளர் வைத்தியிடம் கடும் கோபமாக பேசும் வீடியோ காட்சி தற்போது வாட்ஸ் அப்புகளில் பரவுகிறது. இது அந்த சாதியில் மட்டும் அல்ல அனைத்து ஜாதி பெருமை பேசும் சமூகத்தில்   பெரும் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த வீடியோவில், குருவின் தாயார் கல்யாணியம்மாள் சொல்கிறார்  ” என் குடும்பம் நிலவரம் அனைவருக்கும் தெரியும். இவருக்கும் (வைத்தி) தெரியும். இப்போ ஒன்னுமில்லாமல் நிற்கிறோம். என் பிள்ளைதான் வெறும் ஆளா இருந்தவன். ஆளாளுக்கு கொள்ளையடிச்சீங்க.

எங்கள அம்போன்னு விட்டுட்டு போனது எம்பிள்ளைதான். என் பிள்ளையை பலிக்கொடுத்துட்டு நிக்கிறேன். கட்சி கட்சின்னு வந்து என் குடும்பத்தையே அழிச்சவங்க நீங்க. துரோகம் பண்ணாதீங்க.

என் பிள்ளை செத்த அன்னைக்கு பாத்த இவங்கள, அதுக்கப்புறம் இன்னைக்கு பாக்கிறேன். ஒரு வருஷத்துக்குள்ள உங்க குடும்பமெல்லாம் என்ன பாடுபடப்போகுதுன்னு பாருங்க. கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறீங்க. என்ன கொடுத்து உதவுனீங்க. யாராவது கொடுத்து உதவுனாகூட, கொடுக்காதீங்கன்னு சொல்றீங்க. அவுங்க அப்படி வாழுறாங்க, இப்படி வாழுறாங்கன்னு சொல்றீங்க.

என்ன நாங்க வாழுறோம். என் வீட்டுல வந்து பாருங்க. ஒரு பிள்ளை வைச்சிருந்தேன். பலி கொடுத்துட்டு உட்காருக்கிறேன். ஒருத்தராவது ஆறுதல் வார்த்தை சொல்லிருப்பார்களா… நடவு நட காசு இல்ல… அவன் பேரைச் சொல்லி எம்மா பணம் வசூல் பண்ணீங்க, 10 ரூபா பணம் கொடுத்தீங்களா… இன்னைக்கு வைத்தின்னு பேர் எடுத்தியே யாரால.. ” என தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார்.

இன்னோரு வீடியோவில் உறவினர்களிடம் இருந்து தனது தாயை மீட்டுத் தாருங்கள் என்று மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு பரிதாபமாக கோரிக்கை விடுக்கும் வீடியோ காட்சி வாட்ஸ்அப்புகளில் பரவியது. அதில் அவர் தெரிவிக்கும் விவரம் இதோ பின்வருமாறு..

எங்க அப்பா இறந்ததில் இருந்து எங்க அம்மா ரொம்ப மனவருத்தத்தில் இருந்தார். எங்க அம்மாவுக்கு ஆறுதலாக இருக்கும் என நினைத்து அவுங்க பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். போன இடத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை. எங்க அம்மாவின் கால் உடைந்தது. விழுந்து காலை உடைத்துக்கொண்டாரா அல்லது உறவினர்கள் யாராவது தள்ளிவிட்டார்களா என்று இன்னமும் எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது.

மருத்துவமனையில் இருந்ததில் இருந்து நான் எங்க அம்மாவை பார்க்க சென்றால், உறவினர்கள் உடன் இருந்து கொண்டு அம்மாவிடம் சரியாக பேசவிடவில்லை. ஒவ்வொரு முறையில் நான் அம்மாவிடம் செல்லும்போது, சரியாக பேசவிடுவதில்லை. அம்மா ஒரு பதட்டமாகவே காணப்பட்டார்.

தீபாவளிக்கு நான் அழைத்தப்போது கூட, நான் இப்போது வரும் நிலையில் இல்லை என்றார். ஊர் பெரியவர்களை வைத்து பேசி பார்த்தேன். அப்போதும் அவர் வரவில்லை என்று கூறிவிட்டார்.

கடந்த ஒரு வாரமாகவே எங்க அம்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்க அம்மாவுக்கு எழுத படிக்க தெரியாது. எங்க அம்மாவை எங்கு மிரட்டி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்க அம்மாவை அய்யாதான் கண்டுபிடித்து எங்கள் ஊர் காடுவெட்டியில் ஒப்படைக்க வேண்டும் என்று தழுதழுக்கும் குரலில்  கூறியுள்ளார்.

குறிப்பிட்ட ஜாதிக்காவே போராடி வாழ்ந்து மறைந்த காடுவெட்டி குரு குடும்பத்தின் நிலையை  பார்த்தும் .,  தற்போதய பல தரப்பட்ட ஜாதி வெறியில்  திளைக்கும் நபர்களுக்கு இனியாவது இது ஒரு பாடமாக அமையுமா ..

சவெரா
ச.வெ.ரா பயன்பாட்டு அறிவியல் தியாயகராஜர் பொறியியல் கல்லூரில் முடித்து பின்னர், சர்வதேச வர்த்தக மேல்படிப்பு PGDFTM முடித்து... அதன் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் MBA - Distinction பெற்றார்... சில காலம் அயல் நாட்டில் உழைத்து பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கி, எழுதும் ஆர்வத்தின் காரணமாக எழுத தொடங்கி நண்பர்கள் அறிவுரையால், splco.me சமூக வலைதள தொடர்பகம் நிறுவினார். இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக இரண்டு வருடம் வகித்தபொருளாளர் பதவியை 2009 ஆம் ஆண்டு Indian Asean Srilanka Chamber of Commerce ல் இருந்து விலகினார். திரு சைலேஷ் காந்தி - Information Commisioner (மகாத்மா காந்தி பேரன்) அவர்களுடன் புது டெல்லியில் நியாத்தை வாதிட்டு under Section 8(1)(h) of RTI தகவல் பெரும் உரிமையை பெற்றார். படிப்பதும், மீன் வளர்ப்பும், இயற்கை வேளாண்மையும் இவருக்கு பிடித்தவைகள்...

400 Replies to “திக்கற்ற திசையில் பரிதவிக்கும் “காடுவெட்டி குரு” குடும்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *