நடிகர் அஜித், தனுஷ் மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் 2020 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரையுலகின் தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்திற்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு நடிகர் அஜித்குமார், தனுஷ், ஜோதிகா ஆகியோர் தென்னிந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த நடிகராக அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பன்முக ஆற்றல் கொண்டவராக அஜித்குமாருக்கு சிறப்பு விருதும், ராட்சசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது ஜோதிகாவுக்கும் வழங்கப்படுகிறது.

சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த படமாக இயக்குனர் செழியன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள டூ லெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் ஏற்கனவே தேசிய விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத் ரவிச்சந்திரனுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

விஜய் சேதுபதி நடிப்பில் ‘முகிழ்’ வெப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு