தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று (3-06-2021) கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், “போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்” என எழுதப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

[su_image_carousel source=”media: 24088,24089″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் வீடியோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில்,

திருவாரூரில் கருவாகி, தமிழகத்தையே தனது ஊராக ஆக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவரே.. முதல்வர்களுக்கெல்லாம் முதல்வரே. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே இன்று நீங்கள் பிறந்த தினம் ஜூன் 3. இந்த ஜூன் 3 நான் கம்பீரமாக வருகிறேன்.

உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்ல தலை நிமிர்ந்து வருகிறேன். தலைவருக்கு கொடுத்த வாக்குறுதியை ஒரு தொண்டன் நிறைவேற்றி காட்ட வேண்டும் என்பதற்காகவே உழைத்தேன்.

நீங்கள் மறையவில்லை. மறைந்திருந்து என்னை கவனிப்பதாக தான் எப்போதும் நினைப்பேன். கோட்டையை கைப்பற்றிய அடுத்த நாளே கொரோனாவை ஒழிக்க போராடிக் கொண்டிருக்கிறோம். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று என்னை நீங்கள் உருவகப்படுத்தினீர்கள். அதற்கு உண்மையாக இருக்கவே உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

உங்கள் வார்ப்பான நான் இந்த ஜூன் 3 உங்களை வெற்றி செய்தியோடு சந்திக்க வருகிறேன். வாழ்த்துக்கள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே..” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும்- கேரள அரசு தீர்மானம்