கேளிக்கை

தயாரிப்பாளர் அவதாரமெடுக்கும் சிவகார்த்திகேயன்

பாண்டியராஜ் இயக்கத்தில் ‘மெரினா’ படம் மூலம் சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து எதிர்நீச்சில், வருத்தபடாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்தி பறவை, மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன் என தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் ‘கனா’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழு அனைவரும் கலந்துகொண்டார்கள். அதில் பேசிய சிவகார்த்திகேயன் ,’தனது புது படத்தின் தயாரிப்பு பற்றி கூறியுள்ளார். பெயரிடபடாத இந்த படத்தை யூ-டியூபில் ஃபேமஸான ‘ப்ளாக் ஷீப்’ டீம்மில் இருக்கும் கார்த்திக் தான் இயக்க இருக்கிறார். இதில் ஹீரோவாக ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் ஹீரோ ரியோ ராஜ் நடிக்க இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

73 Replies to “தயாரிப்பாளர் அவதாரமெடுக்கும் சிவகார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *