இந்திய திரையுலகின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளராக திகழ்பவர் சந்தோஷ் சிவன். இவர் தற்போது செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவருகிறார்.

இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல. ஆனால் இன்று பதிவிட்ட டுவிட்டில் சம்பளம் தரக்கூடிய தயாரிப்பாளர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என ஒரு நாயின் புகைப்படங்களை பதிவிட்டு தயாரிப்பாளர்களை கிண்டலடித்துள்ளார்.

அதில், கோபமாக குரைக்கும் நாயின் புகைப்படத்திற்கு மேலே, “தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கும் போது என்றும், அமைதியாக புன்னகையோடு இருக்கும் நாயின் புகைப்படத்திற்கு மேலே கதாநாயகிகளுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கும் போது என்றும்” ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

இது திரையுலகினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2 கோடி வரை சம்பளம், தனி கேரவன் என அனைத்து வசதிகளும் சந்தோஷ் சிவனுக்கு கொடுக்கப்படும் நிலையில், அவர் இப்படி பதிவிட்டிருப்பதற்கு, முன்னணி தயாரிப்பாளர்களா சத்யஜோதி தியாகராஜன், தனஞ்செயன், மனோபாலா, தேனப்பன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விசால் கவனத்திற்க்கும் சென்றுள்ளதாம்.

இந்நிலையில் டுவிட்டரில் தனது பதிவை நீக்கிய சந்தோஷ் சிவன், “நான் பதிவிட்ட டுவிட் ஆங்கிலத்தில் ஃபார்வர்ட் ஆக வந்த செய்தி. பலர் ஆட்சேபனை தெரிவித்தனர். அதனால் அந்த டுவிட்டை நீக்கிவிட்டேன். அந்த பதிவு யாரையும் குறிப்பிடவில்லை” என தெரிவித்துள்ளார்.