கவிப்பேரரசு வைரமுத்து அண்மையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

திரைத்துறை மட்டுமின்றி தமிழுக்காகவும் பல்வேறு படைப்புகளை உருவாக்கி சாதனைகளைப் படைத்தவர் கவிஞர் வைரமுத்து. இவர் எழுதிய பல பாடல்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 18 அன்று, தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெறுகிறது. தேர்தலில் வாக்களித்த வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை. வாக்குத் தவற வேண்டாம்” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது வைரமுத்து திமுக தலைவர் முக. ஸ்டாலினுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழினம் மீளவும், தமிழ்நாடு வாழவும், தளபதி ஆளவும்
வாழ்த்துச் சொன்னேன்” என பதிவிட்டு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.