தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,81,988 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலால் பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு இன்று 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 15,659 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,81,988 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,22,610 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,16,47,723 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 82 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 51 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 31 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,557 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 4,206 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,09,899 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,242 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 1038 பேருக்கும், திருவள்ளூரில் 885 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 39 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 11,065 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,63,251 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 1,05,180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 6,53,167 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 9,469 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,28,783 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 6,190 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 263 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 194.

மத்திய அரசின் செயல்பாடு குறித்து விமர்சனம்; ட்விட்டர் கணக்குகளை முடக்கும் மோடி அரசு!