டெல்லியை போலவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் விவசாய சங்கத்தினர் அரை நிர்வாண போராட்டத்தால் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
 
விவசாய உற்பத்தி பொருளுக்கு லாபகரமான விலை, கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி 29, 30 ஆகிய தேதிகளில் டெல்லியில் பல லட்சம் விவசாயிகள் திரண்டு பேரணி நடத்தினர். அய்யாகண்ணு தலைமையில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்தியது சர்ச்சைக்கு வித்திட்டது.
 
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் ரயில் மூலம் சென்னை திரும்பினர். இதே கோரிக்கையை வைத்து ., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மேலும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெளியிலும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.