சீனாவின் சீனோபார்ம் என்ற கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது சினோவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உலகளவில் பைசர்-பயோஎன்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் கடந்த மாதம் சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியிருந்தது.

இந்நிலையில், இன்று சீனாவில் 2வது கொரோனா தடுப்பூசியான சீனோவேக்- கொரோனாவேக் என்ற தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, சினோவாக் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி நடைமுறைகள் குறித்த சமீபத்திய மருத்துவத் தரவை ஆய்வு செய்த பின்னர், அவசரகால பயன்பாட்டிற்கு சினோவாக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சினோவாக் மருந்து தொடர்பாக வெளியான அறிக்கையில், “இந்த தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம். 2வது டோஸ் 2-4 வாரங்களுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளலாம். இந்த தடுப்பூசி வயதானவர்களுக்கு நல்ல பாதுகாப்பை தரும்” என்று தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் குழு நிபுணர்கள் (SAGE) ஆய்வு அறிக்கையில், சினோவாக் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் தடுப்பூசி செயல்திறன் 51% முதல் 84% வரை இருந்தது என்றும், 60 வயதிற்குட்பட்ட வயதானவர்களில் கொரோனாவை தடுப்பதில் சினோவாக் தடுப்பூசி செயல்திறன் மிக்கது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஒன்றிய அரசின் புதிய ஐடி விதிமுறைகளை ஏற்க தயார்- ட்விட்டர்