ஆண்டிற்கு 10 படங்களிலாவது தீவிரமாக நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது நடிக்கும் “சங்கத்தமிழன்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

பேட்ட, சூப்பர் டீலக்ஸ் என அடுத்தடுத்து படங்கள் வெளியான நிலையில் தற்போது தெலுங்கு படங்களில் சிரஞ்சீவியுடன் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் விஜயா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராசி கண்ணா, ரவிகிருஷான், சிம்ரன், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வருகின்றது சங்கத் தமிழன் படம். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, விவேக், மெர்வின் இசையமைக்கின்றனர். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. சங்கத்தமிழன் எனும் தலைப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.