கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வரும் சூழலில், மம்தா பானர்ஜி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா வாரியர் கிளப் ஒன்றை மாநில அரசு அறிமுகப்படுத்தியது.

அதில், கொரோனாவில் இருந்து விடுபட்டோர், சுகாதார பணியாளர்களுக்கு உதவும் வகையில் உறுப்பினர்களாக இணைத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த கிளப்பில், முதற்கட்டமாக 60 பேர் அதில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு உணவு, தங்குமிடத்திற்கான செலவையும் அரசு ஏற்கும். இதுபோன்ற கிளப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்படும்.

மேலும் கொரோனாவில் தொற்றில் இருந்து குணம் பெற்றவர்களுக்காக மனநல ஆலோசனை கூட்டங்களையும் மேற்கு வங்க அரசு நடத்துகிறது என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மேற்கு வங்க அரசின் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில், கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க: பாடகி சுசித்ரா வெளியிட்ட சாத்தான்குளம் சம்பவம் குறித்த வீடியோ.. நீக்க உத்தரவிட்ட தமிழக காவல்துறை