பிரிட்டிஷ் பேரரசு கட்டிய சென்ட்ரல் ஸ்டேஷன் பெயரை டாஸ்மாக் கண்டுபிடித்த விஞ்ஞானி பெயருக்கு மாற்றம் செய்யும்போது புள்ளிமானாக புன்னகைத்து பூப்பறித்துக் கொண்டிருந்தவர்கள்..

கிழக்குக் கடற்கரைச் சாலை கலைஞர் பெயரை தாங்கும் போது ஏன் திடீர் ஓநாய்களாக மாறி பிராண்டி கொண்டிருக்கிறார்கள்..

காணிக்கையாக இனி கட்டைவிரல் கேட்டால் பட்டை உரியும் என துரோணாச்சாரியார்களுக்கு எதிராக முழங்கியவன் அல்லவா..

என்றைக்கு அம்பாள் பேசியதுடா பூசாரி என ஆரியக் கூட்டத்தை சுட்டிக்காட்டி திராவிட எதார்த்தம் பேசியவன் அல்லவா..

குற்றப்பத்திரிகை கூட போட முடியாத வழக்கில் மிட் நைட்டில் செல்வி ஜெயலலிதாவின் அதிமுக அரசு கைதுசெய்த போதும் சிறைச்சாலைக்கு வெளியே அமைதியாக அமர்ந்து “அறம் வெல்லும்” என எழுதிய எழுத்துக்களை தாங்கியவன் அல்லவா..

தமிழ்நாட்டிலே யாரும் செய்ய முடியாத சாதனையாக 19 வருடமாக அதிக ஆண்டுகளாக முதல்வராக இருந்தும்.. தான் நின்ற 14 சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியையே சந்திக்காமல் வெற்றி தேவதையை கரம் பிடித்து இருந்தும்..

6×3 அடி நிலத்துக்காக இறந்த பிறகும் போராடிய தென்றலை தீண்டாதவனுக்கு தீயை தாண்டியவனுக்கு.. தமிழ்நாட்டில் உள்ள மொத்த கிழக்குக் கடற்கரைச் சாலை தூரமும் கன்னியாகுமரி வரை..

நீண்ட நெடிய சாதனைகளுக்கு சொந்தக்காரரான கலைஞர் கருணாநிதி பெயரை கிழக்குக் கடற்கரை நீண்ட நெடிய சாலைகள் தாங்கினாலும்.. குறை ஏதும் உண்டோ..

சமூக வலைத்தளத்தில் காண: https://www.facebook.com/savenra/posts/8325470334145483