மத்திய பாஜ அரசு, ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக சில ஆதாரங்களுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
 
இது நாடு முழுவதும் எதிரொலித்தது. மத்திய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டால், பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம்  இதில் சம்பந்தப்பட இஷ்டமில்லை என கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
ஆனால் பொய் தகவலை நீதிமன்றத்துக்கு தந்து தீர்ப்பை வாங்கி விட்டது என காங்கிரஸ் ஆதாரமுடன் குற்றம் சாட்டியதால் , அவமானம் அடைந்த மோடி அரசு  அது எழுத்துப்பிழை என கூறி அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் சென்று மறுபடியும் திருத்தி தர மோடி அரசு மனு செய்துள்ளது . அந்த வழக்கு இப்போது விசாரனையில் உள்ளது .
 

மோடி அரசின் நீதிமன்றத்தில் கூறப்பட்ட பொய் தகவலுக்கு உள்ள ஆதாரம்

இந்த நிலையில் பாஜ மூத்த தலைவர்கள் பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு கூறிய ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் காங்கிரஸ் அலுவலகங்கள் முன்பு பாஜவினர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 
அதன் அடிப்படையில் நேற்று மத்திய சென்னை மாவட்ட பாஜ சார்பில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.
 
அதன்படி நேற்று மாலை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே 30க்கும் மேற்பட்ட பாஜவினர் ஒன்று கூடினர்.
 
தேநேரம் தகவல் கிடைத்த காங்கிரசாரும், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், வீரபாண்டியன், தமிழக மீனவர் காங்கிரஸ் தலைவர் கஜநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தலைமையில் சத்தியமூர்த்திபவனில் 300 க்கு மேற்பட்டவர்கள் திரண்டனர்.
 
இதனால் சத்தியமூர்த்திபவன் மற்றும் ராயப்பேட்டை மணிக்கூண்டு ஆகிய இரு இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது சென்னை மாநகர பாஜ பொறுப்பாளர் ஜெய்சங்கர் தலைமையில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் தனஞ்செயன், ஊடக பிரிவு செயலாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், மீனவர் பிரிவு தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட பாஜவினர் சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட செல்ல முயன்றனர்.
 
அவர்களை குண்டு கட்டாக ஒரே பஸ்ஸில் தூக்கி சென்று போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சமூக நலக்கூடத்துக்கு கொண்டு சென்றனர்.
 
அதேநேரம் சத்தியமூர்த்திபவனில் திரண்டு நின்ற காங்கிரசாரும் பாஜவினருக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை போலீசார் வெளியே வராதபடி பேரிகார்டு அமைத்து தடுப்பு ஏற்படுத்தினர். பின்னர் பாஜவினர் கைது செய்யப்பட்ட தகவலை போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து காங்கிரசார் கலைந்து சென்றனர்.