டந்த சில நாட்களுக்கு முன், வங்கக்கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தை தாக்கியது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தன. நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டங்கள் பேரிழப்பை சந்தித்துள்ளன. புயல் காரணமாக இதுவரை 63 க்கும் மேற்பட்டோர் உயிாிழந்திருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னார்வ குழுக்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 5 நாட்களைக் கடந்தும், போதிய உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவித்து கொண்டிருக்கின்றனர். லட்சக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், பல இடங்களில் மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருகின்றனர்.

கஜா புயல் பாதித்த மக்களுக்கு ரஜினி -ரூ.50லட்சம், சூர்யா குடும்பம் – ரூ.50 லட்சம், விக்ரம் – ரூ.25 லட்சம், விஜய் சேதுபதி -ரூ.25 லட்சம், சிவகார்த்திகேயன் -ரூ.20 லட்சம், லைகா நிறுவனம் – ரூ. 1 கோடி, இயக்குநர் ஷங்கர்- ரூ.10 லட்சம், பாடலாசிரியர் வைரமுத்து -ரூ.5 லட்சம் மற்றும் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலம் உதவிகள் என பல சினிமா பிரபலங்களும் நிவாரணப்பொருட்களையும் நிதியுதவியையும் அளித்து வருகின்றனர்.

இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்த நடிகர் விவேக், எஸ்.ஆர்.எம் கல்வி குழும தலைவர் பச்சைமுத்து, பிரபல சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் உள்ளிட்டோர் நிவாரண நிதியுதவி அளித்தனர்.

 

இந்நிலையில், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக பொதுமக்களுக்கு உதவி செய்து வருவதாக நடிகர் அருண் விஜய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் தற்போது நிவாரண பொருட்களை வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக ஆலங்குடி, பரமன்குடி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு தரப்பு மக்கள் நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். இன்று ரூ. 12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பிவைத்துள்ள நடிகை கஸ்தூரி, குடிநீர் சுத்திகரிப்புக் கருவியை புயலால் பாதித்த மக்களுக்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.