புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த இடங்களில் ஒரு கேன் குடிநீர் ரூ.200-க்கு விற்கப்படுகிறது.  குடிக்க குடிநீர் கிடைக்காததால் அதிக விலைக்கு கேன் குடிநீர் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு நிர்வாகம் கவனிக்காமல்   உள்ளது..

வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை, பன்னால், தலைஞாயிறு உள்ளிட்ட இடங்களில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிடவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதில் போலிசார் மக்கள் இடையே நடந்த தள்ளுமுள்ளு காரணத்தினால்  போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கிய மக்கள்  மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்பகுதி  அதனால் கலவர பூமியாக காட்சி அளித்தது .இதனால் பொது மக்கள் மிகவும் பாதிப்பில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கினறனர்..

பட்டுக்கோட்டை அருகே அணைக்காடு கிராமத்தில் 1 லிட்டர் பால் விலை ரூ.100 விற்கப்படுகிறது. அரசு துறை இதுவரை பால் விநியோகம் செய்யவில்லை என் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வீடு இடிந்ததால் சாலையில் தங்கி இருப்பதாக அணைக்காடு மக்கள் கவலை அடைந்துள்ளனர். 

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அருகே சென்னை-நாகை நெடுஞ்சாலையில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பட்டினச்சேரி மீனவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்யவில்லை என அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புயலால் பாதித்த மக்களை மதிக்காமல் அரசு அலட்சியமாக உள்ளது என பாமக குற்றம் சாட்டியுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாள் முழுவதும் உணவு தரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் புயல் பாதித்த மாவட்டங்களை முதல்வர் பார்வையிட செல்லாதது ஏன் என்றும் பாமக அதிமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.

புயல் பாதித்த இடங்களை நேரில் சந்தித்த  திமுக தலைவரும் எதிர் கட்சி தலைவரும் ஆன ஸ்டாலின் ”   நேற்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மையின் கஜாபுயல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை பாராட்டியிருந்தேன்  ஆனால், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தால் மீட்புப் பணிகள் படுமோசமாக இருக்கிறது என்றும்.,  

அப்பாவி மக்கள் முதல் விவசாயிகள், மீனவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், 36 பேர் உயிரிழந்திருப்பது உச்சகட்ட வேதனை என்றும்.,  குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவேயில்லை  இதனை பார்வையிட தமிழக முதலமைச்சருக்கு தயக்கம் ஏன்  என்பது தெரியவில்லை என்றும் .,

புயலால் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அது போதுமானதாக நிச்சயமாக இருந்திட முடியாது, குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாய் அவர்களுக்கு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசினுடைய வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தரவேண்டுமென வலியுறுத்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு அரசு இயந்திரம் முற்றிலும் இயங்கா நிலையில்  கஜா புயல் குறித்த சேத விவர அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்க நவ.22ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரதமரிடம் கஜா புயல் பாதிப்புக்கான நிவாரண நிதியை கோர முதலமைச்சர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.