ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் சிறையில் உள்ள நிலையில் அவர்களது விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டு, அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் மத்திய அரசே நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடா்பாக நடிகா் ரஜினிகாந்திடம் செய்தியாளா்கள், ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது பற்றி கருத்து கேட்கப்பட்டபோது, ‘எந்த 7 பேர்?’ என பதில் கேள்வி எழுப்பியது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

ரஜினியின் இந்தக் கருத்தை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் #எந்த7பேர் என்ற ஹேஷ்டேக் வைரலாகியுள்ளது.

தொடா்ந்து ரஜினிகாந்திடம் பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்று கேள்வி எழுப்பினா். அப்போது, 10 போ் இணைந்து ஒருவரை எதிா்த்து போரிட்டால் யாா் பலசாலி என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நான் முழுவதுமாக கட்சியில் இறங்காத நிலையில் பா.ஜ.க. ஆபத்தான கட்சியா, இல்லையா என்பதை நான் கூற முடியாது என்று பதில் அளித்தார்.

ரஜினியின் பதில்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று தன் கருத்து சா்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ள ரஜினி, “கேள்வி தெளிவாக கேட்கப்படாததால், நான் யாா் அந்த 7 போ் என்று கேட்டேன். எனக்கு தெரியும் என்றால் தொியும் என்று சொல்வேன். தெரியாது என்றால் தொியாது என்று வெளிப்படையாக கூறிவிடுவேன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 போ் யாா் என்று தொியாத அளவிற்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல. சிறையில் உள்ள பேரறிவாளன் பரோலில் வந்த தருணத்தில் அவரிடம் தொலைபேசி வாயிலாக அழைத்து அவரிடம் 10 நிமடங்களுக்கும் மேலாக நலம் விசாரித்தவன் இந்த ரஜினிகாந்த்.

அவா்கள் 7 பேரும் சுமாா் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனா். மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவா்கள் அனைவரும் கண்டிப்பாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

மேலும் பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்று கேள்வி எழுப்பினா். நான் கூறுகையில், எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து பா.ஜ.க. ஆபத்தான கட்சி என்று நினைத்தால் பா.ஜ.க. அவா்களுக்கு ஆபத்தான கட்சியாகத் தான் இருக்க முடியும் என்று தான் நான் கூறினேன்” என்று விளக்கம் அளித்தாா்.

இந்நிலையில், ரஜினியின் கருத்து குறித்து விமர்சித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், “7 பேர் விடுதலை விவகாரத்தைப் பற்றி புரியாமல் இருக்கிறாரா அல்லது புரிந்தும் புரியாததுபோல் திரையில் நடிப்பதுபோல் நடிக்கிறாரா..” என கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில், “முதல்வராக வேண்டும் என கனவு காணும் ரஜினிக்கு அறியாமை பொருத்தம் இல்லை என விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளாக வாழ்ந்த எவரும் ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை தெரியாமல் எப்படி இருக்க முடியும். திருவாளர் ரஜினியின் இதயம் சரியான இடத்தில் இருக்கலாம். இருந்தாலும் அவர் தமிழகப் பிரச்சினைகளில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். இது ஒன்றும் அப்பாவித்தனம் இல்லை. இது அறியாமை. இன்னும் மோசமாக சொல்ல வேண்டும் என்றால் அக்கறையின்மை” என்று கூறியுள்ளார்.

மேலும், ரஜினி சாரின் பொறுப்புணர்ச்சி குறித்து எல்லோரும் என்னிடம் விளக்கிக் கொண்டிருக்கின்றனர். அவருக்கு அந்த 7 பேர் யாரென்றே தெரியாது என்று நான் சொல்லவில்லை. அவரே ஒப்புக் கொள்கிறார், அந்த விவகாரத்தில் நடப்பு விஷயத்தை அறியவில்லை எனக் கூறுகிறார். இது முதல்வர் ஆசை கொண்ட ஒருவருக்கு நிச்சயமாக பொருத்தமானது அல்ல. இதற்கு பதிலளிக்க எந்த விளக்கத்தையும் சொல்லத் தேவையில்லை.

கடந்த சில நாட்களில் செய்திகளை வாசித்திருந்தாலே எந்த 7 பேர் என்பதையும் அவர் தெரிந்து கொண்டிருக்கலாம். பத்திரிகையாளர்களும் கேள்வியில் மிகத் தெளிவாக ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை எனக் குறிப்பிட்டுக் கேட்கின்றனர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.