பிகார் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு சிறுமிகள் ஆளாக்கப்பட்ட சம்பவத்தை எதிர்த்து தில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஒன்று காப்பகத்தை நடத்தி வந்தது. மும்பையைச் சேர்ந்த நிறுவனம் அங்கு ஆய்வு மேற்கொண்டபோது, அங்கிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த காரணமாக இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி மாநில அரசு வழக்கை அவர்களிடம் ஒப்படைத்தது.

இந்த சம்பவம் அரசு சாரா காப்பகத்தில் நடந்ததால் அரசு குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

பிகார் மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி சார்பாக தில்லியின் ஜந்தர் மந்தரில் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி சனிக்கிழமை தர்ணா போராட்டம் நடத்தினார்.

இந்த போராட்டத்துக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அதில் பங்கேற்றனர்.

அங்கு ராகுல் காந்தி பேசுகையில்,
“நமது நாட்டில் உள்ள பெண்களுக்காக நாம் இங்கு கூடியுள்ளோம். அவர்களுடன் நாம் நிற்க வேண்டும். இது அவமானத்துக்குரிய செயலாக நிதிஷ் குமார் உணர்ந்தால் அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

டெல்லி முதல்வர் கேஜரிவால் பேசுகையில் இது 40 நிர்பயா நிகழ்வுகளுக்கு சமம் என்றார்.

இதில் கம்முனியிஸ்ட் தலைவர்கள் சித்தராம் யெச்சுரி மற்றும் ராஜாவும் கலந்து கொண்டனர்.

முன்னதாக முசாஃபர்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கியிருந்த 42 பெண்களில் 29 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது மருத்துவ ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாகவும், மேலும் ஒரு மாணவி கொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

இதில் 7 வயது முதல் 17 வயது சிறுமிகளுக்கு போதை மருந்து எற்றி பல மாதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளது.

அரசு காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது, தனியார் அமைப்பு நடத்திய சமூக ஆய்வறிக்கையில்தான் தெரியவந்திருக்கிறது. இதனால், மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள 14 அரசு காப்பகங்களிலும் பாலியல் வன்கொடுமை நடைபெற்றிருக்குமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்த பிறகே, இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் நிதீஷ் குமார் பரிந்துரை செய்திருக்கிறார்.

அதே சமயம், பிற அரசு காப்பகங்களின் மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது ஏன் என்றும்.,
இந்த 15 அரசு காப்பகங்களிலும் பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக கூறப்படும் புகார் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் கூறி வருகின்றன.