தமிழ்நாடு பாஜக தலைவராக அறிவிக்கப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை இன்று பதவியேற்றுக் கொண்டார். தமிழ்நாடு பாஜகவின் இளம் தலைவர் என்ற பெருமை இவருக்கு (வயது 37) கிடைத்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில், தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு ஒன்றிய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழ்நாடு மாநில புதிய பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.இதனையடுத்து அண்ணாமலை நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு ஒன்றிய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதையடுத்து, புதிய தமிழ்நாடு பாஜக தலைவராக அறிவிக்கப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று (9-7-2021) பதவியேற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு பல சீனியர்கள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அண்ணாமலையை தலைவராக நியமித்துள்ளது தமிழ்நாட்டில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கட்சியை முதலில் பலப்படுத்த என்று எண்ணி பாஜக தலைமை முடிவு எடுத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே புதிய மாநிலத் தலைவராக அண்ணாமலை, தமிழ்நாட்டில் தனது வருங்கால திட்டம் என்ன என்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ் முதல் இணை அமைச்சராக உயர்ந்த எல்.முருகன்..