அரசின் வருவாய்க்கும் செலவுக்குமான வித்தியாசமே நிதிப் பற்றாக்குறையாகும்.
 
அரசின் நிதிப் பற்றாக்குறை, கடந்த அக்டோபர் மாதமே 100 சதவிகிதத்தைத் தாண்டி, 103.9 சதவிகிதமாக இருந்தது. தற்போது இது மேலும் அதிகரித்துள்ளது.
 
கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் அரசின் மொத்தச் செலவு ரூ.16.13 லட்சம் கோடியாகவும், வரி வசூல் மூலமான வரவு ரூ.8.97 லட்சம் கோடியாகவும் உள்ளது.
 
எஞ்சியுள்ள நான்கு மாதங்களில் இந்தப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கக்கூடும்.
 
கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு, நிதிப்பற்றாக்குறை காரணத்தை இலக்காக 6.24 லட்சம் கோடி ரூபாயை நிர்ணயித்திருந்தது.
 
ஆனால் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதங்களுக்கான நிதிப் பற்றாக்குறை, 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டதைவிட 115 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
 
 
இது 3.3 சதவிகித ஜி.டி.பி அளவாகும். ஆனால், தற்போது நிதிப்பற்றாக்குறை 114.8% உயர்ந்து ரூ.7.17 லட்சம் கோடியாக உள்ளது.
 
இதைச் சமாளிக்கத்தான் ரிசர்வ் வங்கியிடம் கூடுதல் நிதியைக் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகத் தகவல் வந்து, பின்னர் அதை அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் பெட்ரோல் வரி உயர்வு மூலம் கடந்த 4.5 ஆண்டுகளாக பெற்ற சுமார் 11 லட்சம் கோடிகள் எந்த முறையில் செலவு செய்யப்ட்டன என்ற விவரத்தை மத்திய அரசு தருவிக்கவில்லை
 
தற்போது, இந்த நிதி நெருக்கடியைச் எப்படி சமாளிக்குமென்று அரசு முழிமுழிப்பதாக தகவல்கள் வந்துள்ளது.. 
 
முன்னதாக வராக்கடன் அதிகரிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு அவர் அளித்த அறிக்கையில், முடிவு எடுப்பதில் அரசின் மந்தம், வங்கிகளின் அதீத நம்பிக்கை, மந்தமான பொருளாதார வளர்ச்சி ஆகியவையே வராக்கடன் அதிகரிக்கக் காரணம் என தெரிவித்திருந்தார்.
 
இதைச் சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி, ரகுராம் ராஜனின் அறிக்கை மூலம் வராக்கடன் அதிகரிப்பதற்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம் என்பது தெளிவாகியிருப்பதாக குறிப்பிட்டார். 
 
ஆனால் இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, பிரதமர் மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு அளித்த கடன்களாலேயே வராக்கடன் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
 
காங்கிரஸ் ஆட்சியை விட்டுச் செல்லும் போது 2 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வராக் கடன் தற்போது 10 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது எப்படி என்றும் ரந்தீப் சுர்ஜிவாலா கேள்வி எழுப்பியதும் அதற்கு மத்திய மோடி அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதும் குறிப்பிடதக்கது