சி.எஸ்.ஆர் திட்டத்தில் துணைநிலை ஆளுநர் ரூபாய் 85 லட்சம் வசூல் செய்ததாகவும் ஆனால் அப்படி வசூல் செய்த தொகையை சி.எஸ்.ஆர் கமிட்டிக்கு அவர் அனுப்பவில்லை என்றும், ஆளுநர் மாளிகையை காட்டி பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார் கிரண்பேடி” என்று அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்துள்ளார் நாராயணசாமி.

ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள கிரண் பேடி தெரிவித்துள்ளதாவது “சமூக பொறுப்புணர்வு நிதி அளிக்க முன்வருபவர்களுக்கு உதவிதான் செய்கிறோம். நேரடியாக கொடையாளர்களை ஒப்பந்தக்காரர்களிடம் இணைத்து பணிகள் நடத்தப்பட்டன , என்றும் மேலும் எசமூக பொறுப்புணர்வு நிதி அளிக்க முன்வருபவர்களுக்கு உதவிதான் செய்கிறோம். நேரடியாக கொடையாளர்களை ஒப்பந்தக்காரர்களிடம் இணைத்து பணிகள் நடத்தப்பட்டன” என்றார்.

இதனையடுத்து, பொது சேவைக்காக மக்களிடம் ஆளுநர் அலுவலகம் வசூலித்தது எவ்வளவு? புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் முதல்வர் நாராயணசாமி ” சமூக பொறுப்புணர்வு நிதி தொடர்பாக துணை நிலை ஆளுநர் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளார் .காரணம் சமூக நிதி வழங்குவது தொடர்பாக வரையறைகள் உள்ளன என்றும் இது தொடர்பாக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு எற்ப்பட்டுள்ளது ..