உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிட்ட தேர்தல் ஆணையம் வார்டு வரையறை செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என்று கூறியுள்ளது

அப்படி எப்படி என்று சாக்கு போக்கு சொல்லி தமிழக ஆரசு இரண்டு வருடத்தை தள்ளி விட்டது . இதனால் சுமார் 4000 கோடிகள் தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி வராமலே தங்கி விட்டதும் குறிப்பிடதக்கது..

தேர்தல் நடந்த்தால் அரசை தொடர்ந்து நடத்த முடியாமல் போய் விடும் என்று அதிமுக தரப்பு பயப்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் கூறிய நிலையில் வார்டுகள் வரையறை பணி ஆகஸ்ட் இறுதியில் முடியும் என்றும் வார்டுகளுக்கு இட ஒதுக்கீடு பற்றி அரசு முடிவெடுக்க வேண்டி உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இதனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டும் நடத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன் விவரம் வருமாறு:-

தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு பல மாதங்களாகி விட்டது. ஆனால், தேர்தலை நடத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சுப்ரீம் கோர்ட்டிலும் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது, தேர்தலை நடத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த செயல் கோர்ட்டை அவமதிக்கும் விதமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அப்போது குறுக்கிட்ட எதிர் தரப்பு மூத்த வக்கீல் வில்சன், ‘சுப்ரீம் கோர்ட்டில் தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பான வழக்கு மட்டும் தான் நிலுவையில் உள்ளது. அதனால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மீண்டும் வலியுறுத்தினார்.

இதையடுத்து நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.அதில் ஆகஸ்ட் 6-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இல்லையெனில் அது கோர்ட்டை அவமதிப்பதாக கருதப்படும் என்று உத்தரவிட்டனர்.ஆனால் அந்த நாளிலும் தேதி வாங்கிய தமிழக அரசு இன்று இந்த தகவலை கூற ., மீண்டும் நாளை என்ன சொல்ல போகிறது என்பது நாளை தான் தெரியும் என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள்