தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ரூ.750 கோடி இழப்பீடு கோரிய வழக்கில் வேதாந்தா குழுமத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த விஜய் நிவாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் குழுமம், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மேலும் வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் 4 வாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட கிராமங்களின் புனரமைப்புக்காக ரூ.620 கோடி வழங்கவும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22-ஆம் தேதி மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தான் இப்போது ரூ.750 கோடி இழப்பீடு கோரிய வழக்கில் வேதாந்தா குழுமத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் தான் முதல் முறையாக SLR அதி நவின ரக துப்பாக்கி பயன்படுத்தி ஒரு கிமீ தொலைவில் இருந்து பொதுமக்களை போலிஸ் குருவி போல சுட்டது பெரும் அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்ப்படுத்தியது.