இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய நாளான 1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி பாலிவுட்டில் “83” என்ற பெயரில் திரைப்படமாகி வருகிறது.

இப்படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங், கவாஸ்கர் கேரக்டரில் தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத் கேரக்டரில் சாகிப் சலீம், பல்விந்தர் சிங் கேரக்டரில் அம்மிவிரிக், ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா, கிர்மானி கேரக்டரில் சாஹில் கட்டார், வெங்கசர்க்கார் கேரக்டரில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி கேரக்டரில் தாரிய கர்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கபீர்கான் இயக்கிய இந்த படம், தோனி திரைப்படம் போல் மிகப்பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

83 திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கபில்தேவ், பல்விந்தர் சிங் சந்து, ரன்வீர்சிங் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் நடிகர் ஜீவாவும், கலந்து கொண்டார். ஜீவா இப்படத்தில் கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடித்துள்ளார்.

இதில் நடிகர் ஜீவா கபில்தேவ், பல்விந்தர் சிங் சந்து உள்பட இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.