மோடி அரசின் 6 மணி நேர தீடிர் உத்தரவால் பாதிக்கப்படட கோடிக்கணக்கான ஹிந்தி பேசும்   வட இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள்  சொந்த ஊர்களுக்குத் திரும்பும் முயற்சிகளின் போது

விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பது, உணவு, உறைவிடம் ஆகியவை இல்லாமல் தவிப்பது போன்றவை குறித்த ஊடகச் செய்திகளின் அடிப்படையில்  வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து 61 நாளுக்கு பிறகே  விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

மேலும் காங்கிரஸ் கட்சி மற்றும் சில சமூக செயல்பாட்டாளர்கள் தரப்பிலும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக சில இடையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கபில் சிபல், இந்திரா ஜெய்சிங், காலின் கொன்செல்வ்ஸ், சஞ்சய் பாரிக் உள்ளிட்டோர் காணொலிக் காட்சி மூலம் வாதிட்டனர்.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயணக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் கட்டணங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணம் தொடங்கும் பொழுது எந்த மாநிலத்தில் பயணம் தொடங்குகிறதோ அந்த மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும். ரயில் பயணத்திபோது இந்திய ரயில்வே அவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

[su_carousel source=”media: 14258,14259″ limit=”100″ width=”700″ height=”400″ items=”1″ scroll=”2″ speed=”0”]

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான ரயில் அல்லது பேருந்துக்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதற்கான தகவல்களையும் அவர்கள் சிக்கிக்கொண்டுள்ள மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சொந்த ஊர் திரும்புவதற்கான முன்பதிவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்வது மட்டுமல்லாமல் அவர்கள் கூடிய விரைவில் போக்குவரத்து வசதிகளை பெறுவதையும் அந்தந்த மாநில அரசுகள் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் எவ்வளவு தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞர், “எதிர்பார்க்காத இந்த அவசர நிலை காலத்தில், அரசு அறிவிப்புகள் ஏதுவுமின்றி பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. சுமார் ஒரு கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊர்களுக்கு அரசு கொண்டு சேர்த்துள்ளது” என்று கூறியுள்ளார்.

[su_spacer size=”30″]

[su_spacer size=”30″]

ஆனாலும் மத்திய அரசை எந்த வகையிலும் நிர்பந்திக்காத இந்த உத்தரவு ஏன் என்றும் மோடி அவர்களின் #PMCARES நிதி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவாவமல் என்ன பயன் என மூத்த வழக்கறினர் பூசன் கேள்வி எழுப்பியாதல் பரபரப்பு எழுந்துள்ளது

[su_spacer size=”30″]

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=jWNUctGQ14s” width=”700″ autoplay=”yes” title=”உணவு தண்ணீர் இல்லாமல் உயிரிழந்த தாய்; சடலத்துடன் விளையாடிய குழந்தை- புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம்”]

மேலும் வாசிக்க: ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவிடமாக மாற்றுவதில் திடீர் சிக்கல்