தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் பெண் பாலின பிறப்பு விகிதம் குறைந்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.
 
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மக்கள் தொகை கணெக்கெடுப்பு ஆணையத்தின் புள்ளி விபரத்தின்படி தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் பெண் பாலின பிறப்பு விகிதம் குறைந்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.
 
இதில் தமிழ்நாட்டில் 1000 ஆண்களுக்கு 935 பெண்கள் என்று இருந்த விகிதம் 2016-ம் ஆண்டில் 840 ஆக குறைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
 
இதேபோல் 2007-ம் ஆண்டில் கர்நாடகாவின் பாலின விகிதம் 1004 இருந்த நிலையில், தற்போது 896 ஆக குறைந்துள்ளது.
 
ஆந்திரா 974-ல் இருந்த பாலின விகிதம் 806 ஆகவும், ஒடிசா 919லிருந்து 858 ஆகவும் குறைந்துள்ளது.
 
இந்த புள்ளி விபரத்தின் படி, கேரளா தவிர்த்து தென் மாநிலங்களில் ஆண் பெண் விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளது பலத்த அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது  இதனால் இன்னும் 15 ஆண்டுகளில் ஆண்களுக்கு கல்யாணம் செய்து கொள்ள பெண் கிடைப்பது அரிதாகி விடும் நிலை உருவாகி உள்ளது.
 
இன்னும் 10~15 ஆண்டுகளில் தமிழக ஜனத்தொகையில் ஒரு கோடி ஆண்களுக்கு 6.5லட்சம் பெண்கள் இல்லாமல் போக .. பல லட்சம் கட்டை பிரம்மசாரிகளை உருவாக்கும் நிலை என்பது மிகவும் கவலைக்குறிய விஷயமாக கருதப்படுகிறது