மும்பையில் கோடியில் கட்டப்பட்டுள்ள இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
இந்தியாவின் முதல் சினிமா அருங்காட்சியகம் ரூ. 140 கோடி செலவில் நாளை மும்பையில் திறக்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள 19ம் நூற்றாண்டு அரண்மனையான குல்ஷன் மஹால் மற்றும் ஒரு கட்டிடம் என்று 2 கட்டிடங்களில் இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சினிமா வளர்ச்சி அடைந்த வரலாற்றை தெரிந்துக் கொள்ளும் வகையில் பல்வேறு ஆவணங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.
மௌன பட காலம், பேசும் படம் உருவான காலம், உலகப் போரின் தாக்கங்கள் இந்தியாவில் ஏற்பட்டது எப்படி, பிராந்திய மொழிப் படங்களில் உருவாகியுள்ள நியூ ஏஜ் சினிமா மேக்கிங் என ஆதி காலம் தொட்டு தற்காலம் வகையில் இந்திய சினிமாவின் வரலாற்றை ஒன்பது பகுதிகளாகப் பிரிந்து ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து காந்தியும் சினிமாவும், குழந்தைகளுக்கான திரைப்பட அரங்கம், இந்திய திரைத்துறையின் படைப்பாற்றலும் தொழில்நுட்ப மேம்பாடும், பிராந்திய மொழி திரைப்படங்கள் என நான்கு விதமான காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளஞான.
இந்திய சினிமா வரலாற்று புகைப்படங்கள், வீடியோக்கள், சாதனங்கள் ஆகியவை அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 1998ம் ஆண்டு துவங்கப்பட்ட அருங்காட்சியக பணி 2013ம் ஆண்டே முடிந்தும் அதன் திறப்பு விழா நடைபெறுவதில் சிக்கல் இருந்து வந்தது.
இந்நிலையில் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.